சில பெண்கள் கணவன் கொடுமைகாரன் என தெரிந்தும் சேர்ந்து வாழ்வார்கள் . சில பெண்கள் குழந்தைகள் நலனுக்காக பிரிந்து வாழ்வார்கள் . யார் எப்படி போனால் எனக்கென்ன என்று சில பெண்கள் சுயநலமாய் இருப்பார்கள் .
ஆனால் இந்த பெண் நிஜத்தில் துணிச்சலானவள் தான் . அதிரடியாய் செயற்பட்டு கணவனின் அட்டகாசத்தை நிறுத்தி இருக்கிறாள்
திருச்சியில் உள்ள வயலூர் முருகன் கோவிலில் கோரி மேடு பகுதியைச் சேர்ந்த மணி என்பவரின் மகன் சுரேஸ்குமாருக்கும், சுகந்தி என்பவருக்கும் திருமணம்நடைபெறவிருந்தது.
அப்போது திடீரென்று திருமணத்திற்கு வந்திருந்த பெண், மணமேடையில் இருந்த மாப்பிள்ளை பார்த்து என் வாழ்க்கையை வீணாக்கியது போல, இன்னொருபெண்ணின் வாழ்க்கையையும் வீணாக்க விடமாட்டேன்என்று தாலி கட்டும் நேரத்தில் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. அப்போது அந்த பெண், திருமணன் கோலத்தில் இருந்த பெண்ணிடம் இவர் தான் என் கணவர், எங்களுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகிவிட்டது.
எங்களுக்குகுழந்தையும் இருக்கிறது. இது தான் அந்த குழந்தை என்று கையில் இருந்த குழந்தையை காண்பித்துள்ளார்.
இந்த சம்பவம் உடனடியாக பொலிசாருக்கு தெரியவந்ததால், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் சுரேஷ் குமாரை கைதுசெய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அதன் பின் இது குறித்து அந்த பெண் கூறுகையில், என்னுடைய பெயர் லாவண்யா எனவும், தனக்கும் சுரேசுக்கும் கடந்த கடந்த 2012-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12-ஆம் திருமணம் நடைபெற்று முடிந்தது.
திருமணத்திற்கு பிற்கு அவர் அதிகமாக மது அருந்தி அடித்து சித்ரவதை செய்ததால், நான் என் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டேன்.
அதுமட்டுமின்றி பெண் குழந்தை பிறந்ததால், மாமியாரும், இவரும் என்னை மொத்தமாக ஒதுக்கிவிட்டார்கள். பெற்றோர் வீட்டிற்கு சென்ற என்னை இவர்கள் அழைக்கவே வரவில்லை.
இந்நிலையில்நேற்றிரவு எனக்கு ஒரு போன் வந்தது. அப்போது உன் கணவன் இரண்டாவது திருமணம்செய்யப் போகிறார் என்று கூறினர்.
முதலில்நான் நம்பவில்லை, அதன் பின் இங்கு வந்து பார்த்தபோது தான் உண்மை புரிந்தது. என்னுடைய வாழ்க்கை சீரழிந்தது போல, அந்த பெண்ணின்வாழ்க்கையும் சீரழிந்துவிடக்கூடாது என்பதற்காக திருமணத்தை தடுத்து நிறுத்தினேன் என்று கூறியுள்ளார்.








