முக அழகை அதிகரிக்க இது ஒன்றே போதுமானது

பொதுவாக சில பெண்கள் தங்கள் அழகினை தக்கவைத்து கொள்ளுவதற்காக சலூன், மற்றும் ஸ்பாக்களுக்கு சென்று நேரத்தினையும் பணத்தையும் மட்டும் செலவழிப்பதுண்டு.

இதற்கு வீட்டிலேயே இருக்கும் சில சமையற்பொருட்களை கொண்டு இயற்கை அழகினை பெற முடியும். அவை என்ன என்பதை பார்ப்போம்.

பால் பல தசாப்தங்களாக அழகு சாதனமாக உள்ளது. பாலில் உள்ள லாக்டிக் அமிலம் ஒரு குறுகிய காலத்திற்குள் சூரியனால் ஏற்படும் தாக்கத்தை நீக்கும் திறனைக் கொண்டுள்ளது.

எலுமிச்சைத் தூள் முகத்தில் உள்ள கருந்திட்டுகளை அடியோடு அழிக்கும் ஒரு பொருளாகும். இது முகத்திலுள்ள கருமை தன்மையை நீக்கி முகம் பொலிவு பெற உதவு செய்கின்றது.

தேவையான பொருட்கள்
  • ஒரு தேக்கரண்டி துருவிய எலுமிச்சை பவுடர்
  • ஒரு தேக்கரண்டி பச்சை பால்
செய்முறை

பச்சை பால் மற்றும் எலுமிச்சைத் தூள் பயன்படுத்தி ஒரு மென்மையான பேஸ்ட் செய்யவும்.

கலவை மிகவும் தண்ணீராக இருந்தால் சிறிது எலுமிச்சை பவுடரை சேர்த்து நன்றாக பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பின்பு அந்த பேஸ்டை முகத்தில் நன்றாக பூசி கொண்டு சுமார் 15 நிமிடங்கள் உலரவிடுங்கள்.

பின்னர் தண்ணீரை பயன்படுத்தி அதை சுத்தம் செய்யுங்கள்.

இந்த பேஸ்பேக்கை ஒரு வாரத்தில் இருமுறை அல்லது மூன்று முறை பயன்படுத்தப்பட வேண்டும்.

இந்த பேஸ் பேக்கில் உள்ள பால் உங்கள் தோலை மென்மையாகவும், மிருதுவாகவும் மற்றும் சருமத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட தோல் மூலம் சிகிச்சையளிக்கப்பட்டு முகத்தை பொலிவையும் அழகையும் தருகின்றது.