துருக்கி நாட்டில் பரபரப்பான சாலை ஒன்றில் நபர் ஒருவர் தமது முன்னாள் மனைவியை கொடூரமாக தாக்கியதை பார்த்த பார்வையாளர் ஒருவர் அவரை பாய்ந்து தாக்கிய வீடியோ ஒன்று பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
குறித்த அதிரவைக்கும் வீடியோவில் நபர் ஒருவர் தொடர்ச்சியாக பெண்மணி ஒருவரை கொடூரமாக தாக்குகிறார்.
ஒருகட்டத்தில் அவர் வலி தாங்க முடியாமல் முட்டின் மேல் நின்று உதவிக்கு கெஞ்சுகிறார்.இதனிடையே யாரும் எதிர்பார்க்காத நிலையில் நபர் ஒருவர் பாய்ந்து சென்று பெண்மணியை தாக்கும் அந்த நபரை தலையால் முட்டித் தள்ளுகிறார்
இதனையடுத்து அந்த சாலை வழியாக சென்ற மக்கள் ஒன்று கூடி அவரை சரமாரியாக தாக்குகின்றனர்.
சொந்த மனைவியாக இருந்தாலும், நடுத்தெருவில் இவ்வாறு கண்மூடித்தனமாக தாக்குவது என்பது மிகவும் கண்டனத்துக்கு உரியது என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
விவாகரத்து பெற முடிவு செய்துள்ள இருவரும் நீதிமன்ற விசாரணைக்கு செல்லும் வழியிலேயே அவர் ஆத்திரத்தில் கண்மூடித்தனமாக தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே சமூக ஊடகங்களில் குறித்த வீடியோ பலரது கவனத்தையும் ஈர்த்த நிலையில், குறித்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்









