உலகின் முதலாவது 5G வீடியோ அழைப்பு பரிசோதனை!! OPPO வின் அதிரடி அறிவிப்பு!!

புத்தாக்கமான தொழில்நுட்பத்தினூடாக நவீன 5G மற்றும் 3D கட்டமைக்கப்பட்ட தொழில்நுட்ப வெளிப்படுத்தல் ஊடாக இந்த தொழில்நுட்பங்கள் மற்றும் UR (Ubiquitous Reality) க்கு உதவும் 5G அப்ளிகேஷன்கள் மற்றும் டேர்மினல்களை கண்டறிதல்.பன்முகப்படுத்தப்பட்ட அப்ளிகேஷன் விதிமுறைகளுக்கு பொருத்தும் 3D கட்டமைக்கப்பட்ட தொழில்நுட்பம் OPPO தொலைபேசிகளில் 6 மாதங்களுக்குள் அறிமுகம் செய்யப்படும்.OPPO சர்வதேச ஆய்வு நிறுவனம் (ஷென்சென்) உலகின் முதலாவது 3D கட்டமைக்கப்பட்ட தொழில்நுட்பத்தின் பயனாக 5G வீடியோ அழைப்பை பரிசோதிக்க முடிந்ததாக அறிவித்துள்ளது.

இந்த விளக்கத்தின் போது, Qualcomm டெக்னொலஜிஸ் உதவியுடன், PPO தொலைபேசியின் 3D கட்டமைக்கப்பட்ட கமராவில் தரவுகள் சேகரிக்கப்பட்டிருந்ததுடன், அவை திரையில் வெளிப்படுத்தப்பட்டிருந்தன. இந்த புத்தாக்கமான தொழில்நுட்பத்தின் பரீட்சார்த்த செயற்பாடுகள் வெற்றியளித்திருந்ததை தொடர்ந்து, 5G தொழில்நுட்பத்தை துறையில் பிரயோகிப்பதற்கான முக்கிய மைல் கல் எய்தப்பட்டுள்ளது.

3D கட்டமைக்கப்பட்ட தொழில்நுட்பத்தினூடாக 5G வீடியோ அழைப்பை OPPO வெளிப்படுத்தியிருந்த போது, மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய OPPO R11 இன் ஒன்றிணைக்கப்பட்ட கட்டமைப்புடனான கமராவையும் கொண்டுள்ளது. மாதிரி பரிசோதனையின் போது, வர்ணம் மற்றும் முப்பரிமாண ஆழம் பற்றிய விவரங்கள் திரட்டப்பட்டிருந்ததுடன், RGB ஊடாக இலக்கு வைக்கப்பட்ட பொருள் மற்றும் கட்டமைக்கப்பட்ட கமரா குறித்தும் கவனம் செலுத்தப்பட்டிருந்தது.

இந்த தகவல் 5G சூழலில் கடத்தப்பட்டிருந்ததுடன், ரிமோட் டிஸ்பிளே திரையில் இலக்கு வைக்கப்பட்ட காட்சி வெளிப்படுத்தப்பட்டிருந்தது.OPPO ஆய்வு நிலையத்துக்கான ஹார்ட்வெயார் ஆய்வு மையத்தின் பணிப்பாளர் பை ஜியான் கருத்துத் தெரிவிக்கையில், 3D கட்டமைக்கப்பட்ட தொழில்நுட்பத்தினூடாக 5G வீடியோ அழைப்பின் வெற்றி என்பது எமது புத்தாக்க பயணத்தை உறுதி செய்வதாக அமைந்துள்ளதுடன், பாவனையாளர்கள் மற்றும் நவீன தொழில்நுட்பத்தை புரிந்து கொள்வதில் நாம் காண்பிக்கும் ஈடுபாட்டை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது.

OPPO இனால் 3D கட்டமைக்கப்பட்ட தொழில்நுட்பம் ஸ்மார்ட்ஃபோன்களில் அறிமுகம் செய்யப்படவுள்ளதுடன், எமது வாடிக்கையாளர்களுக்கு புதிய தொழில்நுட்பத்தை 6 மாதங்களுக்குள் அறிமுகம் செய்வதாக அமைந்திருக்கும்” என்றார்.

OPPO ஆய்வு நிலையத்துக்கான ஸ்டான்டர்டைசேஷன் ஆய்வு குழுமத்தின் பணிப்பாளர் டங் ஹாய் கருத்துத் தெரிவிக்கையில், “5G ஆய்வு மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளில் சுமார் 3 வருடங்களுக்கு முன்பிருந்தேன ஈடுபடOPPO ஆரம்பித்திருந்ததுடன், 5G தயாரிப்புகள் வடிவமைப்பில் சர்வதேச நியமப்படுத்தல் செயற்பாடுகளில் பங்குபற்றி வருகிறது. 2018 ஜனவரியில், 5G மாதிரி திட்டத்தை Qualcomm டெக்னொலஜிஸ் உடன் முன்னெடுப்பதாக நாம் அறிவித்திருந்தோம். 2019இல் முதலாவது 5G கையடக்க தொலைபேசிகளை அறிமுகம் செய்ய தம்மை அர்ப்பணித்துள்ளனர்” என்றார்.உயர் வேகம் (eMBB), உயர் கொள்ளளவு (mMTC) மற்றும் குறைந்த லடென்ஸி (URLLC) போன்ற அம்சங்களைக் கொண்ட 5G தொழில்நுட்பம் மொபைல் தொலைத்தொடர்பாடல் துறையில் புதிய ஆரம்பமாக கருதப்படுகிறது. eMBB இன் நியமப்படுத்தல் மற்றும் முதிர்வு போன்றன ஆரம்ப கட்டத்திலுள்ள நிலையில், OPPO வாடிக்கையாளர்களுக்கு உயர் வினைத்திறனை பெற்றுக் கொடுக்கும் வகையில் 5G வலையமைப்பை ஏனைய புகைப்பட மற்றும் உணரி தொழில்நுட்பத்துடன் இணைத்து வழங்கவும், இதர விதிமுறைகளான Ubiquitous Reality, Virtual Reality, Augmented Reality மற்றும் Reality போன்றவற்றுடன் ஒன்றிணைக்க எண்ணியுள்ளது.

OPPO ஆய்வு நிலையத்துக்கான சொஃப்ட்வெயார் ஆய்வு குழுமத்தின் பணிப்பாளர் சென் யான் கருத்துத் தெரிவிக்கையில், “நியம உலகம் மற்றும் டிஜிட்டல் உலகத்துக்கிடையிலான எல்லையை தெளிவற்றதாக்கும் வகையில் மொபைல் இணையம் அமைந்துள்ளது. 3D உள்ளடக்கம் என்பது சிறந்த பாவனையாளர் அனுபவத்தை மேலும் மேம்படுத்தும் வகையில் அமைந்திருக்கும்.புகைப்பட தொழில்நுட்பம் மற்றும் பாவனையாளர்களின் தேவைகளுக்கு பிரத்தியேகமான உள்ளார்ந்த அம்சம் ஆகியவற்றுடன் OPPO இனால் எதிர்காலத்தில் புத்தாக்கமான அப்ளிகேஷன் விதிமுறைகள் அறிமுகம் செய்யப்படும். 3d கட்டமைக்கப்பட்ட தொழில்நுட்பத்துடன், பாவனையாளர்களுக்கு ஒப்பற்ற மொபைல் அனுபவம் மற்றும் பாதுகாப்பான கொடுப்பனவு,3d மீள்நிர்மாணம், AR மற்றும் கேமிங் போன்றன ஏற்படுத்தப்படும்.