கனேடிய ஒன்ராரியோ மாகாண தேர்தலில் ஈழத்து பெண்மணி போட்டி

கனேடிய ஒன்ராரியோ மாகாண தேர்தலில் லிபரல் கட்சியில் [Liberal Party ] போட்டியிடும் சுமி சண் [Sumi Shan]புங்குடுதீவு மடத்துவெளியை சேர்ந்த சண்முகநாதன் [Co] கனகாம்பிகை [ஆசிரியர் ] மகள் ஆவார் சமூக சேவையில் ஆர்வம் கொண்ட தந்தையும் தாயும் தற்போது இலங்கையில் சமூக சேவையில் உள்ளனர்,இவர் ஒரு தமிழ் பெண்மணி இவர் அரசியலில் பட்டப்படிப்பினை  முடித்தவர்.

இத்துறையில் 20 வருட அனுபவம் உடையவர் அத்துடன் ஒன்ராரியோ அரசில் சிரேஷ்ட மந்திரிகளுக்கு ஆலோசகராகவும் Heart&Storke Foundation and Microsoft நிறுவனத்தில் முகாமையாளராக வேலை செய்த அனுபவம் உடையவர் .

ஈழத்திலும் தன்னுடைய Infinite என்னும் நிறுவனம் மூலம் வட மாகாண முதல்வர் அனுமதியுடன் சுற்றுசூழல் நீர் என்பனவற்றை துப்பரவாக்கும் பணியை யாழ்ப்பாணத்தில் செய்து கொண்டிருக்கும் இவர் கனடாவிலும் தன் பணியை ஸ்காபுறோ ரூச் பார்க் [Scar Borough -Rouge Park ]தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு இப்பகுதி மக்களுக்கும் தான் சார்ந்த கட்சியின் மூலம் சேவை செய்ய விரும்பி நிக்கும் இவரை ஆதரித்து வெற்றி அடைய செய்யுமாறு கனடா Scar Borough-Rouge Park வாக்காள பெருமக்களை கேட்டுக்கொள்கிறோம்

Publiée par Nadarajah Muralitharan sur samedi 26 mai 2018