நாணயசுழற்சியை தொடர முடிவு

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நாணய சுழற்சி முறையை தொடர்வதற்கு ஐசிசி தீர்மானித்துள்ளது.

ஐசிசியின் கூட்டத்தில் இது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது

மும்பாயில் அனில் கும்ளே தலைமையில் நடந்த கூட்டத்தில் இது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது

மேலும் வீரர்கள் மைதானத்தில் பந்தை சேதப்படுத்துவது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் தண்டனையை அதிகப்படுத்தவேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது

மேலும் பந்து வீச்சிற்கும் துடுப்பாட்டத்திற்கும் சமமான வாய்ப்பை வழங்கும் விதத்தில்  ஆடுகளத்தை தயாரிக்க வேண்டும் என்ற பரிந்துரையையும் ஐசிசி முன்வைத்துள்ளது.