பழங்கள் என்றாலே இதை இந்த பருவத்தில் சாப்பிடக் கூடாது, இந்த சமயத்தில் சபபிட வேண்டும் என பல பழங்களிய ஒதுக்கி விடுவோம். குளிர்காலத்தில் சிட்ரஸ் பழங்களை நிறைய பேர் சபபிட மாட்டார்கள். கேட்டால் சளி பிடித்துவிடும் என்று
சொல்லிவிடுவார்கள். அன்னாசி, மாம்பழம் போன்றவற்றை பார்த்து பார்த்து நிதானமாக வெயில் காலத்தில் சாப்பிடுவார்கள். கேட்டால் அவை சூடு என்று சொல்லிவிடுவரகள்.
ஆனால் உண்மையில் அந்தந்த பருவத்தில் விளையும் பழங்களிய அந்தந்த சமயத்தில் சாப்பிடும்போது உங்கள் உடல் அந்தந்த சீதோஷணத்திற்கு கட்டுப்படும். ஆனால் சீஸன் பழங்களிய ஒதுக்கும்போதுதன அடிக்கடி உடல் நலம் சரியில்லாமல் போகிறது.
சிட்ரஸ் பழங்கள் அதிக நோய் எதிர்ப்பு சக்தியை நமது உடலுக்கு தருவதால் உடலில் எந்த நோய் நொடியும் வராமல் காக்கப்படும். ஆனால் நாம் அதனை செய்வதில்லை.
அதுபோல், சீதாபழத்தை சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்ற பேச்சு உண்டு. அது உண்மையா என தெரிந்து கொள்ள கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்.
சீதாப் பழம் சாப்பிட்டால் சளி பிடிக்குமா?
நிச்சயம் இல்லை. சீதாப்பழம் குளிர்ச்சியை தரும். இப்படி குளிர்ச்சியான பழங்களை சாப்பிடும்போது உடல் வெப்ப நிலை குறையும். அவ்வளவுதான். பொதுவாக குளிர்ந்த வெப்ப நிலை, கிருமிகள் பெருகக் காரணமாகிறது. அந்த வெப்ப நிலையில்தன கிருமிகள் உயிர் வாழும்.
எப்போது தாக்கும்?
உங்கள் உடலில் வெப்ப நிலை குறையும் போது, உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் உடனே கிருமிகள் தாக்கும். இதுதான் விசயமெ. அப்படியென்றால் நீங்கள் சத்தான உணவுகளை சாப்பிட்டு நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்த வேண்டுமே தவிர, சீதாப்பழத்தை தடைப் பண்ண தேவையில்லை.காரணம் அதன் சத்துக்களை தெரிந்து கொள்ளுங்கள்.
நன்மைகள் :
சீதாப்பழத்தில் புற்று நோய்க்கு எதிரான காரணிகள் இருக்கின்றது. அடிக்கடி சபபிடுபவர்களுக்கு புற்று நோய் தாக்கும் அபாயம் குறைவு.இதில் அதிக இரும்புச் சத்து உள்ளது. மூளை வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. வளரும் குழந்தைகள் இதனை தாராளமாக சாப்பிடுவதால் புத்திசாலித்தனம் அதிகரிக்கச் செய்யும்.