கேரளாவில் மாணவியை நீண்ட நேரம் கட்டிப்பிடித்ததாக சர்ச்சையில் சிக்கிய மாணவன் 12 ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளான்.
கேரளா, திருவனந்தபுரத்தில் உள்ள செயிண்ட் தாமஸ் மத்திய பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவியைப் பாராட்டுவதற்காக பிளஸ் 2 மாணவர் கட்டிப்பிடித்தார்.
ஆனால் அவர் நீண்ட நேரம் கட்டிப்பிடித்ததாக எழுந்த குற்றச்சாட்டில் மாணவர் மாணவி இருவரும் பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
மீண்டும் இந்த மாணவனை பள்ளியில் சேர்த்துக்கொள்வதற்கு பள்ளி நிர்வாகம் மறுப்பு தெரிவிக்கவே, பல்வேறு போராட்டத்திற்கு பின்னர் 12 ம்வகுப்பு பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டான்.
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அந்த மாணவர் 91.2 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இந்த மாணவர் ஆங்கிலத்தில் 100க்கு, 87 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். பொருளாதாரத்தில் 99, வணிகவியலில் 88, கணக்கு பதிவியலில் 92, உளவியலில் 92 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இதுபற்றி அந்த மாணவரின் தந்தை கூறுகையில் ‘‘எனது மகனின் ஒழக்கம் பற்றி பலரும் சர்ச்சையை ஏற்படுத்தினர். ஆனால் அவர் சிறப்பான முறையில் படித்து தேர்ச்சி பெற்றுள்ளார்’’ எனக் கூறினார்.