சென்னை: நடிகை ஹூமா குரேஷி காலா படப்பிடிப்பின் போது ரஜினியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், இப்படத்தில் இரண்டு நாயகிகளுள் ஒருவராக நடித்துள்ள ஹூமா குரேஷி தனது டிவிட்டர் பக்கத்தில் காலா படப்பிடிப்பின் போது எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இப்படத்தில் மும்பை தாதாவாக ரஜினி நடித்துள்ளார். எனவே படத்தின் பெரும்பாலான காட்சிகளில் அவர் கருப்பு சட்டை மற்றும் கருப்பு வேட்டி அணிந்தே வருகிறார். ஆனால், இப்புகைப்படத்தில் அவர் கருநீல சபாரி சூட் அணிந்திருக்கிறார்.
காலாவில் ரஜினியின் மனைவியாக நடிகை ஈஸ்வரிராவ் நடித்துள்ளார். காலாவின் காதலியாக ஹூமா வருகிறார். எனவே, இக்காட்சி பிளாஷ்பேக் காட்சிகளில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது