உங்களைப் பற்றி உங்கள் உதடு என்ன செல்கிறது?

நமது உடலில் இருக்கும் எல்லா அங்கங்களும் ஏதோ ஒரு விதத்தில் எம்மைப் பற்றி அதாவது எமது குணங்களை பிரதிபலிக்கும்.அவ்வாறு உங்கள் உதடு உங்களைப் பற்றி என்ன சொல்கிறது என பாருங்கள்.

சமமாக உள்ள உதடுகள்

இவர்கள் மிகவும் உணர்ச்சி மிகுந்தவராக இருப்பார். அதாவது தமது குடும்ப உறவுகளில் சார்ந்து அவர்களில் பாசம் மிகுந்தவராக இருப்பார்.மேலும் இவ்வகை உதட்டை உடையவர்கள் சிறிதளவு நண்பர்களையே வைத்திருப்பார்கள் அதுவும் அவர்களின் நம்பிக்கைக்குறியவரையே நண்பராக்குவார்.

மெல்லிய மேலுதட்டைக் கொண்டவர்கள்

இவர்கள் அதிகம் ஆளுமையானவர்களாக காணப்படுவார்.மேலும் இவர்கள் தனித்து வாழ விரும்புபவராகவும் தமக்கென தனியான பாதை அமைத்து அதன் படி நடப்பவராகவும் இருப்பார்.காதல் போன்ற விடயங்கள் இவர்களுக்கு சிறப்பாக அமையாது இருப்பினும் இவர்கள் தங்களுக்கென அமைத்த பாதையில் சிறப்பாக முன்னேறுவார்.

நடுவில் குவிந்த அல்லது சற்று வீங்கிய உதடு

இவாவகையானவர்கள் துணிச்சவோடு எதையும் கையாளக்கூடியவர்கள். அனைவரும் தங்களை சுற்றி வர வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். தன்னை அழகுபடுத்திக் கொள்வதில் முதலிடம் வகிப்பவராகள் இவர்களே.

நீளமான உதடுகள்

நம்பகத்தன்மையின் அடயாளம் இவர்கள். தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகள் அனைத்தையும் சிறப்பாக நிறைவேற்றுவார்.மேலும் சமூகத்தில் சிறந்த மதிப்புள்ள நபராகவும் காணப்படுவார்.

சற்று பெரிய மேலுதட்டைக் கொண்டவர்கள்

அவர்கள் அதிக கோபக்காரர்களாக இருப்பார். எப்பொழுதும் தமது பெருமையை பேசுபவராகவும் காணப்படுவார் மேலும் அவர்கள் தங்களுக்கென ஒரு நட்பு வட்டத்தை உருவாக்க விரும்புவதில்லை.