உங்கள் வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க!

அலுமினிய காப்பிட்ட தற்காலிக திரை

உங்கள் ஜன்னல்களின் வெளிப்புறத்தில் சிறிதளவு இடைவெளி விட்டு அலுமினிய காப்பிட்ட திரையைப் போடுங்கள் பின் நீங்கள் வெய்யிலின் போது ஜன்னல்களை திறந்து விட்டாலும் வெய்யில் உட்புகாது கற்று இடைவெளியினூடு வீட்டிற்குள் வரும் இது ஒரு சிறப்பான முறை.

சூரியன் மறைவுக்குப்பின் ஜன்னல்களை திறந்து வைத்தல்

நீங்கள் இரவில் உங்கள் ஜன்னல்களை திறந்து வைப்பதன் மூலம் பகல் வெப்பம் போய் வீடு குளிர்ச்சியடையும்.

நீங்கள் உபயோகிக்கும் உபகரனங்கள்

சாதாரணமாக பயன்னடுத்தும் மின்குமிழ்கள் அதிக வெப்பத்தை வெளியிடும் எனவே அவற்றின் பாவனையைக் குறைத்து எல்.ஈ.டி மின்குமிழின் பாவனையை ஏற்படுத்துவதன் மூலம் சிறிதளவு வெப்பத்தைக் குறைக்க முடியும்.

வெய்யில் நேரத்தில் நீர்ப் பயன்பாட்டை குறையுங்கள்

வெய்யில் காலத்தில் நீங்கள் நீரை பயன்படுத்தினால் அந்த நீர் ஆவியாக குறித்த பிரதேசம் சூடாக இருக்கும் எனவே வெய்யில் நேரங்கள் நீர்ப்பயன்பாட்டைக் குறைத்தல் நன்மை பயற்கும்.

படுக்கைகளிற்கு வெள்ளைத் துணியைப் பயன்படுத்துங்கள்

படுக்கைகளுக்கு வெள்ளை போன்ற நிறம் குறைந்த விரிப்புகளை பயன் படுத்துங்கள் கறுப்பு போன்ற கடுமையான நிறங்கள் உறிஞ்சி வெப்பத்தை வெளிவிடும் எனவே மெல்லிய நிற படுக்கைகளைப் பயன்படுத்துங்கள்.

காற்றோட்டத்தை ஏற்படுத்துங்கள்.

வெளியில் காற்றோட்டமாக இருந்தால் கதவு, ஜன்னல்களைத் திறவுங்கள் இதன்மூலம் வீட்டிற்குள் ஒரு நல்ல காற்றோட்டம் உருவாகும்.

இயற்கை மரங்களை உருவாக்கல்

வீட்டைச் சூழ மரங்களை நடுவதன் மூலம் ஒரு குளிர்மையைப் பெற முடியும்.

வீட்டு கூரைகளிற்கு வெள்ளை நிற பூச்சை பூசுங்கள் இது வெப்பத்தை உறிஞ்சும் தன்மை குறைவானது.