தனுஷை கலங்க வைத்த மரணம்..

தூத்துக்குடியில் நடந்து வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் இதுவரை 13 பேர் மரணமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர்களில் ஸ்டண்ட் கலைஞர் ஒருவரின் தங்கையின் கணவரும் அடக்கம்.

இந்நிலையில் தற்போது தனுஷ் இந்த துப்பாக்கி சூட்டில் தன்னுடைய ரசிகரும் பலியாகி உள்ளதாகவும் கூறி ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.

அந்த பதிவில் துப்பாக்கி சூட்டில் என் நற்பணி மன்ற தம்பி S.ரகு(எ)காளியப்பன் மரணம் என்னை நிலை குலைய வைத்துள்ளது.அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். வெளிநாட்டிலிருந்து வந்தவுடன் தம்பி குடும்பத்தினரை சந்திக்கிறேன். தம்பி ஆன்மா சாந்தியடைய மிகுந்த வேதனையுடன் இறைவனை வேண்டுகிறேன் என பதிவு செய்துள்ளார்.