தமிழில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.
தற்போது இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் விரைவில் தொடங்க உள்ளது. இந்த சீசனையும் கமல்ஹாசன் அவர்களே தொகுத்து வழங்க உள்ளார்.
அதேபோல் தெலுங்குவில் இரண்டாவது சீசன் தொடங்க உள்ளது. இந்த சீசனை பிரபல நடிகரான நாணி தொகுத்து வழங்க உள்ளார். இதற்கு முன்னதாக பிரபல நடிகரான என்.டி.ஆர் தொகுத்து வழங்கி வந்தார்.
அப்போது 70 நாட்களாக இருந்த தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது இரண்டாவது சீசனில் இருந்து 100 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.