சிறந்த வாழ்க்கையை வாழ இவற்றை செய்யுங்கள்!

அனைவரது வாழ்க்கையிலுமே சந்தோசமான, சோகமான தருணங்கள் இருக்கும்.அதே போல திருமண வாழ்க்கையம் அனைவருக்கும் சிறப்பானதாய் அமைவதில்லை உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கீழே கூறப்படுபவற்றை பின்பற்றினால் நிச்சயம் பலன் கிடைக்கும்.

மரியாதைஉறவுகளுக்கிடையே மரியாதை இல்லாதபோது அந்த உறவு அர்த்தமற்றதாகிவிடும். ஒரு உறவில் ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்துவது முக்கியம், அது முடிவு வாரியாக அல்லது கருத்து வாரியாக இருக்கலாம். ஒரு மனிதனின் மிக முக்கியமான அறிகுறிகளில் ஒன்றுதான் மரியாதை பல குடும்பங்கள் சிறப்பாக வாழவும் மறாக பிரிந்து போகவும் மரியாதை முக்கியமானதான இருக்கிறது. எனவே ஒருவருக்கொருவர் மரியாதையுடன் நடப்பதனால் உறவு என்றும் நிலைத்திருப்பது மட்டுமல்ல மகிழ்ச்சியாகவும் இருக்கும்.

உங்களுடைய நட்பு வட்டாரங்களை ஒன்றாக்கிடுங்கள்அதாவது கணவன், மனைவி இருவரும் உங்கள் நண்பர்களை ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்தி அவர்களையும் ஒரே நட்பு வட்டாரத்துக்கு கொண்டுவருவதன் மூலம் பல புரிதல்கள் உருவாகும் உங்களிடையே கணவன் மனைவி என்ற உறவைத் தாண்டி நல்ல நண்பர்களாக இருக்க வழி கிடைக்கும்.

அனைத்தையும் சந்தோசமாக அனுபவியுங்கள்உங்கள் வாழ்க்கையில் அனைத்தையும் இலகுவாக எடுத்து சந்தோசமாக கடந்து செல்கிறீர்கள் என்றால் நீங்க்ள சிறந்த உறவைக் கொண்டிருக்கின்றீர்கள் என்ற அர்த்தம்.

நீங்கள் எப்பொழுதும் ஒருவரை ஒருவர் சார்ந்திருங்கள்

அதாவது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நீங்கள் ஒருவருக்கு ஒருவர் துணையாக எப்பொழுதும் இருங்கள் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காத வரை அந்த உறவு மகிழ்ச்சியானதாகவே அமையும்.

முத்தம்

முத்தம் அன்பை வெளிக்காட்டுவதற்கான ஒரு சிறந்த வழி.இது உங்கள் உறவுக்கான பற்றுதலை இன்னும் அதிகரிக்கும்.

விவாதம்
உங்கள் மனதிற்கு சிரி என நினைத்ததை நிறைவேற்ற உங்கள் துணையுடனான சிறந்த தொடர்பைப் போணுங்கள்.விவாதித்தல் அனைத்து பிரச்சனைக்குமான தீர்வாக அமையாது.

ஒருவரை ஒருவர் பெற்றதற்காக மகிழ்ச்சியடையுங்கள்முதலில் துணையுடனான சிறந்த தொடர்பை பேணுவதுடன் அவரது நல்ல குணங்களை நேசியுங்கள் அவரை அடைந்ததற்காக மகிழ்ச்சியடைவதை அவரிடம் உணர்த்துங்கள்.

உங்களை ஒரு சிறந்த மனிதனாக மாற்றியது உங்கள் துணை என்பதை அவரிடம் வெளிப்படுத்துங்கள்.