இணையத்தைக் கலக்கும் தோனி மகளின் வீடியோ!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி, தன் மகள் ஸிவாவுடன் மைதானத்தில் விளையாடும் காட்சிகள் தற்போது இணையத்தைக் கலக்கி வருகிறது.

தோனி

மகாராஷ்ட்ரா மாநிலம் புனே மைதானத்தில் பஞ்சாப் அணி மற்றும் சென்னை அணிக்கு இடையேயான போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாகக் களமிறங்கிய லோகேஷ் ராகுல்
7 ரன்களிலும் கிறிஸ் கெயில் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் இழந்தது. கருன் நாயர் அதிகபட்சமாக 54 ரன்கள் எடுத்தார். இறுதியில் 19.4 ஓவரில் 10 விக்கெட் இழப்புக்கு பஞ்சாப் அணி 153 ரன்கள் எடுத்தது.

அடுத்து களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் அம்பதி ராயுடு 1 ரன்களிலும் டூப்லளிஸ் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். சுரேஷ் ரெய்னா அதிகபட்சமாக 61 ரன்கள் எடுத்தார். இறுதியாகக் களமிறங்கிய டோனி அவரது ஸ்டைலில் சிக்சர் அடித்து போட்டியை முடித்தார். சென்னை அணி 19.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

இதைத்தொடர்ந்து டோனி தன் மகள் ஸிவாவுடன் மைதானத்தில் விளையாடிய காட்சிகள் சமூக வலைதளத்தில் மிகவும் வேகமாக வைரலாகிவருகிறது. அந்த வீடியோவில் குழந்தை ஸிவா தன் தந்தை டோனியின் சி.எஸ்.கே தொப்பியைக் கழற்றி மாட்ட முயற்சி செய்கிறது. பிறகு, தோனியே அதைச் செய்துவிடுகிறார். தொப்பி மாட்டிய குஷியில் ஸிவா துள்ளிக்குதிக்கும் காட்சிகள் காண்போர் மனத்தை வெகுவாக கவர்ந்து இழுக்கிறது. இதுதான் சமூக வலைதளத்தில் இன்றைய நம்பர் ஒன் வீடியோ.