தென் மாகாணத்தில் நான்கு வைரஸ் தொற்றுகள் காரணமாகவே இந்த காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக மருத்துவ ஆய்வு நிருவகத்தால் கணடறியப்பட்டுள்ளதாக தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த காய்ச்சல் காரணமாக இதுவரை 150 ற்கு மேற்பட்டவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாக ஜீ. விஜயசூரிய மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சிறுவர்கள் உள்ளிட்ட 15 பேர் இந்த வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.