கர்நாடக சட்டமன்றத்தில் தொடங்க இருந்த பெரும்பான்மை நிரூபிக்கும் படலத்திற்கு முன்பாகவே தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளியேறினார் எடியூரப்பா. கர்நாடகத் தேர்தலை மிகவும் ஜாக்கிரதையாக அணுகிய பா.ஜ.கவுக்கு பெரும் இடியாக அமைந்தது காங்கிரஸ் – ம.ஜ.த கூட்டணி. தேர்தல் முடிவுக்குப் பிறகு நடந்த அடுத்தடுத்த நிகழ்வுகளால் ஒட்டுமொத்த இந்தியாவும் கர்நாடக விவகாரங்களின் மேல் கவனம் குவித்தது. பல வியூகங்களை வகுத்துப்பார்த்தது பா.ஜ.க. கவர்னரின் அழைப்பின் பேரில் 104 இடங்களை வைத்து முதல்வர் ஆன எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது பா.ஜ.கவுக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இந்த விவகாரம் தொடர்பாக பேசியுள்ளார், “கர்நாடகத்தில் அமைந்துள்ள சந்தர்ப்பவாத காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி நீடிக்காது. அங்கு மீண்டும் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும்” என கூறியுள்ளார் தமிழிசை.