ரயிலுடன் மோதி இழுத்து செல்லப்பட்ட கார்- (வீடியோ)

பாதுக்கவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன் கார் ஒன்று மோதி விபத்து சம்பவித்துள்ளது.

இந்த விபத்து மீகொட தல்பொலவத்த ரயில் பாதுகாப்பு கடவையில் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் காரில் பயணித்த இரு பெண்கள் காயமடைந்துள்ளனர்.

பாதுகாப்பற்ற ரயில் கடவை காரணமாக இந்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன் இவ்விபத்து தொடர்பிலான சீசீடிவி காட்சிகள் அருகில் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சீசீடிவி கமராவில் பதிவாகியுள்ளது.

விபத்தின் பின்னர் கார் ரயிலுடன் சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் ஹோமகம மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.