மைத்திரியின் மகளின் செயற்பாடு குறித்து வியந்து போன குடும்பம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகளின் செயற்பாடு குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறன.

குறைந்த வருமானம் பெறும் குடும்பம் ஒன்றுக்கு ஜனாதிபதியின் மகள் சத்துரிக்கா சிறிசேன வீடு ஒன்றை கட்டி கொடுத்துள்ளார்.

ஹிங்குரங்கொட பிபில பிரதேசத்தில் வாழும் குடும்பத்திற்கே புதிய வீடு ஒன்று நிர்மாணித்து கொடுக்கப்பட்டுள்ளது.

குறைந்த வருமானம் பெறும் நுவன் சேனாரத்ன என்ற குடும்பத்திற்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் வீடு அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய அனைத்து வசதிகளையும் கொண்ட வீடு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

நிர்மாணித்தை வீட்டினை பயனாளருக்கு வழங்கும் நிகழ்வு ஜனாதிபதியின் மகள் சத்துரிக்கா சிறிசேனவின் தலைமையில் நடைபெற்றது.