கொழும்பு, புறக்கோட்டையில் நாட்டாமையாக செயற்பட்ட நபரை கைது செய்த பொலிஸார் அதிர்ச்சி அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
நாட்டாமையாக செயற்பட்ட நபர் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின் பேரில், பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
100 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை கையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட போதும், அவரை விசாரணை செய்த பொலிஸாருக்கு அதிர்ச்சி கிடைத்துள்ளது.
குறித்த சந்தேகநபரின் வீட்டினை சோதனை செய்த போது சுமார் 2.268 கிலோகிராம் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் பெறுமதி 2.45 கோடி ரூபாய் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுனில் ஷாந்த வீரக்கொடி என்ற இந்த சந்தேக நபர் பல கொள்ளைச் சம்பவங்களுக்கு தொடர்புபட்டுள்ளதாகவும், அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் 7 பிடியாணைகள் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரை ஹொரனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 25ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நிதிபதி உத்தரவிட்டுள்ளார்.






