`என் மக்களைச் சந்திக்க மீண்டும் வருகிறேன்!’ – பிக்பாஸ் 2 டீசரை வெளியிட்ட கமல்

நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் 2 டீசரை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

`பிக்பாஸ்’. கடந்தாண்டு தமிழ்த் தொலைக்காட்சி உலகில் அதிகம் வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சி. ஷோ தொடங்குவதற்க்கு முன் ஆங்கர் யார், பங்கேற்பவர்கள் யார் என பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. யாரும் எதிர்பாராத ஆங்கராக நடிகர் கமல்ஹாசன் களமிறங்கினார்.

`பங்கேற்பவர்கள்’ என  சமூக வலைதளங்கள் பல பட்டியல்களை வெளியிட்டன, கடைசியில் விஜய் டிவி அதிகாரபூர்வ லிஸ்டை வெளியிட்டது. ஓவியா, வையாபுரி உள்ளிட்ட சினிமாவில் வாய்ப்பில்லாதவர்களே அதிகம் இடம்பிடித்திருந்தனர். ஆனாலும் ஷோ பிக் அப் ஆகி, `ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’, `ஓவியா ஆர்மி’, `ட்ரிகர் பண்றாங்க’, `நீங்க ஷட் அப் பண்ணுங்க’, `முட்டை எப்படிடா காணாமப் போச்சு’ போன்ற வார்த்தைகள் வைரலாகின.  ஹிட் ஆன ஷோ என்றால் வெர்ஷன் 2 வேண்டாமா? இதோ `பிக்பாஸ் 2’ தயாராகி விட்டது.

kamal

ஜூன் இரண்டாவது வாரத்தில் ஷோ தொடங்கப்படவிருக்கிற நிலையில் அதற்கான டீசர் இன்று வெளியாகியுள்ளது. கமல்ஹாசனே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுருக்கிறார். இரண்டாவது சீசனுக்கும் தொகுப்பாளர் கமல்ஹாசனே. போட்டியாளர்களும் தேர்வாகி விட்டதாகவே தெரிகிறது.