தாய்க்காக மகனின் செயற்பாடு!

காலியில் சிகிச்சைக்காக தாயை கூட்டி வந்த மகன், வைத்தியரை கடுமையாக தாக்கிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையில் மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

21ஆம் வார்டில் சிகிச்சை பெற்ற தாயை 17வது வார்ட்டிற்கு மாற்ற தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த 21 வயதுடைய மகன் வைத்தியரை தாக்கியுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நிவ்மோனியா நோயினால் பாதிக்கப்பட்ட பெண்ணை பரிசோதித்த வைத்தியர், மேலதிக சிகிச்சைக்காக 17வது வாட்டிற்கு மாற்றுமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

எனினும் மாற்ற தாமதம் ஏற்பட்டமையினால் கோபமடைந்த நோயாளியான பெண்ணின் மகன் வைத்தியரின் தலையில் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

பின்னர் வைத்தியர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வைத்தியரை தாக்கிய சந்தேக நபர் கராப்பிட்டிய வைத்தியசாலை பொலிஸாரினால் கைது செய்யபபட்டுள்ளார்.