மாயமாய் மறைந்து போன ராஜபக்ஷ குடும்பம்!!

எட்­டா­வது நாடா­ளு­மன்­றத்­தின் இரண்­டா­வது அமர்வு நேற்­றுப் பிற்­ப­கல் வைபவ ரீதி­யாக ஆரம்­ப­மா­னது. அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வின் கொள்கை விளக்­க­வு­ரை­யும் நடை­பெற்­றது.ஏப்­ரல் மாதத்­தின் இரண்­டா­வது நாடா­ளு­மன்­றக் கூட்­டத்­தொரை சிறப்பு அர­சி­தழ் அறி­வித்­தல் மூலம் அரச தலை­வர் முடக்­கி­யி­ருந்­தார். அந்­தக் கூட்­டத்­தொ­டர் நேற்று ஆரம்­ப­மா­னது.அர­ச­மைப்­பின் 19ஆவது திருத்­தச் சட்­டத்­தின் பிர­கா­ரம், புதிய நாடா­ளு­மன்­றக் கூட்­டத்­தொ­டர் ஆரம்­ப­மா­கும் நாளில், அக்­கி­ரா­ச­னத்­தி­லி­ருந்து அரச தலை­வர் அர­சின் கொள்­கைக் கூற்றை வாசிக்­க­வேண்­டும்.சபை அமர்வை ஆரம்­பித்து வைப்­ப­தற்­கும், அர­சின் கூற்றை வாசிப்­ப­தற்­கும் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தனது பாரி­யார் சகி­தம் பிற்­ப­கல் 2 மணி­ய­ள­வில் நாடா­ளு­மன்ற வளா­கத்­துக்கு வந்­தார்.சபா­நா­ய­க­ரும், நாடா­ளு­மன்ற செய­ல­ரும் அவரை வர­வேற்­ற­னர். 21 பீரங்­கிக் குண்­டு­கள் முழங்க அரச தலை­வ­ருக்கு அணி­வ­குப்பு மரி­யாதை அளிக்­கப்­பட்­டது.பிற்­ப­கல் 2.15 மணி­ய­ள­வில் அரச தலை­வர் அவைக்­குள் வந்து, அக்­கி­ரா­ச­னத்­தில் அமர்ந்து, கொள்­கைக் கூற்றை வாசிக்க ஆரம்­பித்­தார். சுமார் 30 நிமி­டங்­கள் வரை அது தொடர்ந்­தது. அதன்­பின்­னர் சபை நட­வ­டிக்­கை­கள் இன்று பிற்­ப­கல் ஒரு மணி­வரை ஒத்­தி­வைக்­கப்­பட்­டதுசபை­யி­லி­ருந்து அரச தலை­வர் வெளி­யே­றிய பின்­னர், தேசிய கீதத்­து­டன் சம்­பி­ர­தா­ய­பூர்வ அமர்வு நிறை­வு­பெற்­றது.முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச, அவ­ரின் புதல்­வர் நாமல் ராஜ­பக்ச, முன்­னாள் சபா­நா­ய­கர் சமல் ராஜ­பக்ச ஆகி­யோர் சபைக்கு வர­வே­யில்லை.