உங்களது பிறந்த திகதி இதுவா? வாழ்க்கை துணை….

ஜாதகத்தில் தனி பொருத்தம் மற்றும் பலன்கள் இருப்பதை போன்று ஒருவரின் பிறந்த திகதியை வைத்து பொது பலன்கள் மற்றும் வாழ்க்கை துணையை தெரிந்துக் கொள்ளலாம்.

1,10,19,28 ம் திகதியில் பிறந்தவர்கள்

இந்த திகதியில் பிறந்தவர்கள் 3, 4, 5, 6, 8 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்ளலாம்.

ஆனால் 1-ஆம் திகதியில் பிறந்தவர்களை திருமணம் செய்யக் கூடாது. ஏனெனில் அதனால் கௌரவப் பிரச்சனைகள், குடும்ப அன்யோன்யம் குறைதல் போன்ற சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

2,11,20,29 திகதியில் பிறந்தவர்கள்

இந்த திகதியில் பிறந்தவர்களுக்கு 1, 3, 5, 6, 7 ஆகிய எண்களில் பிறந்த பெண்கள் மிகவும் ஏற்றவர்கள்.

ஆனால் 8, 9-ஆம் திகதியில் பிறந்த பெண்களை மட்டும் மணக்கவே கூடாது. ஏனெனில் அதனால் அவர்களின் வாழ்க்கை நரகமாகிவிடும்.

3,12,21,30 திகதியில் பிறந்தவர்கள்

இந்த திகதியில் பிறந்தவர்கள் 2, 3, 9 ஆகிய எண்களில் பிறந்தவர்களைத் திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை இனிமையாக அமையும்.

4,13,22,31 திகதியில் பிறந்தவர்கள்

இந்த திகதியில் பிறந்தவர்கள் 1, 8, 5, 6 ஆகிய திகதிகளில் பிறந்த பெண்களை திருமணம் செய்து கொண்டால் திருமண வாழ்க்கை நல்லப்படியாக அமையும்.

அதுவும் 4-ம் திகதியில் பிறந்த ஆண்கள், 6-ஆம் திகதியில் பிறந்த பெண்ணை திருமணம் செய்துக் கொண்டால் அவர்களது பொருளாதார வசதிகள் முன்னேற்றமடையுமாம்.

5,14,23 திகதியில் பிறந்தவர்கள்

இந்த திகதியில் பிறந்தவர்கக்கு 5, 9 ஆகிய எண்களில் பிறந்த பெண்கள் மூலம் காதலால் மிகவும் ஈர்க்கப்படுவார்கள். இவர்கள் 1, 3, 6 பிறந்தவர்களையும் மணக்கலாம்.

6,15,24 திகதியில் பிறந்தவர்கள்

இந்த திகதியில் பிறந்தவர்கள் 6, 9 எண்களில் பிறந்த பெண்களை திருமணம் செய்துக் கொள்வதால் நல்ல வாழ்க்கை அமையும்.

ஆனால் இவர்கள் 1, 3, 4, 5 ஆகிய எண்களில் பிறந்தவர்களை திருமணம் செய்யாமல் தவிர்ப்பது மிகவும் நல்லது.

7,16,25 திகதியில் பிறந்தவர்கள்

இந்த திகதியில் பிறந்தவர்கள் 1, 2, 5, 6 ஆகிய எண்களில் பிறந்தவர்களை மணந்து கொண்டால் நல்ல திருமண வாழ்க்கை அமையும்.

ஆனால் இவர்கள் 8-ம் திகதி பிறந்தவர்களை மணந்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் அவர்களின் இல்வாழ்க்கை கசந்துவிடும்.

8,17,26 திகதியில் பிறந்தவர்கள்

இந்த திகதியில் பிறந்தவர்கள் 1, 4 ஆகிய திகதிகளில் பிறந்த பெண்களை திருமணம் செய்துக் கொள்ளலாம். ஆனால் 2, 7, 8-ம் திகதியில் பிறந்த பெண்ணை மட்டும் திருமணம் செய்யக் கூடாது என்று கூறப்படுகிறது.

9,18,27 திகதியில் பிறந்தவர்கள்

இந்த திகதியில் பிறந்தவர்கள் 3, 5, 6, 9 ஆகிய எண்களில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொண்டால், இவர்களது திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும்.

ஆனால் இவர்கள் 2, 11, 20, 29, 8, 17, 26 ஆகிய திகதிகளில் பிறந்த பெண்களையும், கூட்டு எண் 2, 8 ஆக வரும் பெண்களையும் திருமணம் செய்யக்கூடாது. ஏனெனில் அதனால் அவர்களின் வாழ்க்கை துயரமாக அமைய வாய்ப்புகள் உண்டு.