பாலியல் வன்கொடுமை செய்து சிறுமி தீ வைத்து எரிப்பு!

இந்தியாவில் 16 வயது சிறுமியை, பாலியல் வன்கொடுமை செய்து தீ வைத்துக் கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடமாநிலங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலம், பகுர் மாவட்டத்தில் உள்ள கன்கர்போனா பகுதியில் 16 வயது சிறுமி ஒருவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இந்நிலையில், இதனை அறிந்த உள்ளூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சிறுமியின் வீட்டிற்கு நுழைந்துள்ளார். குறித்த சிறுமியை மிரட்டிய அவர், பாலியல் வன்கொடுமை செய்து பின் அவரை தீவைத்து கொளுத்தியுள்ளார்.

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைத்து, சிறுமியை காப்பாற்றினர். பின்னர், தப்பி ஓடிய இளைஞரை பொலிசார் கைது செய்தனர்.

குறித்த சிறுமி, மேற்கு வங்கத்தில் உள்ள மால்ட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். பகுர் மாவட்ட நிர்வாகம் அவருக்கு நிவாரணமாக ரூ.20 ஆயிரத்தை வழங்கியுள்ளது.