இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம், இலங்கை வானொலிக் கூட்டுத்தாபனம், சுயாதீன தொலைக்காட்சிச் சேவை ஆகியவற்றுக்குப் புதிய தலைவர்கள் கொண்ட புதிய பணிப்பாளர் சபையை நியமிக்க நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தீர்மானித்துள்ளார்.
இதன் காரணமாக இப்போது மேற்படி நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களை இராஜினாமா செய்யுமாறு அமைச்சர் பணிப்புரை விடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, அமைச்சரவை மாற்றம் இடம்பெற்ற கையோடு அரச ஊடகங்களில் மறுசீரமைப்பை ஏற்படுத்தும் நோக்கில் அமைச்சர் இந்தப் பணிப்புரையை விடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.