சாக்கடையில் விழுந்து உயிருக்கு போராடிய நாய்குட்டி!

உத்திரப்பிரதேச மாநிலம், லக்னோவில் சாலையின் நடுவே அமைந்துள்ள கால்வாயில் தவறுதலாக விழுந்து 2 நாட்களாக தவித்து வந்த 3 மாதம் மதிக்கத்தக்க நாய் குட்டியை ஆளில்லா விமானத்தின் உதவியுடன் இளைஞர் ஒருவர் காப்பாற்றியுள்ளார்.

லக்னோ நகரின் சாலையின் நடுவே… இருபக்கம் கான்கிரீட் மதில் சுவருடன் கூடிய 20அடி ஆழமுள்ள கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 3 மாதம் மதிக்கத்தக்க நாய் குட்டி ஒன்று தவறி விழுந்து வெளியே வரமுடியாமல் சத்தமிட்டுக் கொண்டு தவிதுள்ளது.

இந்நிலையில் இந்த நாய் குட்டியை மிலிந்த் ராஜ் என்கிற இளைஞர் காப்பாற்ற நினைத்தார்.

இதற்கு முதல் கட்டமாக ரிமோட் கண்ட்ரோளருடன் கூட ஆளில்லா விமானம் மூலம் வெளியே கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டார். மேலும் இந்த விமானத்தில் நாய் குட்டியை பாதுகாப்பாக தூக்க கூடிய இயந்திரக் கைகளையும் பொருத்தினார் பின், ரிமோட் மூலம் விமானத்தை இயக்கி நாய் குட்டியை பாதுகாப்பாக மேல தூக்கி பத்திரமாக மீட்டார்.

தற்போது இந்த நாய் குட்டி நலமுடன் உள்ளது. என்றும் இதற்க்கு டோக்கி என்று பெயர் வைத்து வளர்த்து வருவதாகவும் மிலிந்த் ராஜ் தெரிவித்துள்ளார். மேலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

அதே போல் நாய் குட்டியின் தவிப்பை புரிந்து அதனை வெளியேற்ற முயற்சி மேற்கொண்ட இளைஞருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.