இந்தியாவில் சமீப காலமாக பெண்கள் குறிப்பாக சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் பெருகி வருகிறது.ஆசிஃபா சம்பவம் சமீபத்தில் நாட்டையே உலுக்கியது காரணம் குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஆளும் அமைச்சர்களே பேரணி நடத்தியது.ஆசிஃபா சம்பவத்தோடு நிற்காமல், அடுத்து அடுத்து சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமைகள் தினமும் தொடர் கதையாகிவருகின்றது.
நாட்டு மக்களின் கடும் கண்டனங்களை தொடர்ந்து மத்திய அரசு ஒரு அவசர சட்டத்தை கொண்டு வந்தது.சட்டம் கொண்டு வந்தும் எந்த பலனும் இல்லை. காரணம் சட்டத்தின் விதிகள் அப்படி அமைந்திருந்தது.
கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தால் தான் மரண தண்டனை. 12 வது சிறுமியை தனி நபராக சீரழித்தால் மரண தண்டனை இல்லை என்கிறது அந்த புதிய சட்டம்.மேலும், பெண்களை கூட்டாகவோ தனி ஆளாகவோ சீரழித்தால் அவனுக்கு குறிப்பிட்ட ஆண்டு கால சிறை தண்டனை மட்டுமே என்கிறது அந்த புதிய சட்டம்.
இதனால் தான் இரண்டு தினங்களுக்கு முன்னர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சாமியார் ஆசாராம் பாபுவிற்கு மரண் தண்டனை வழங்காமல் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடதக்கது.
இந்த புதிய சட்டம் மக்களிடையே வரவேற்பை பெருவதற்கு பதிலாக எதிர்ப்பைபே பெற்றது.
ஏன் வயது வறைமுறை ? தனி நபராக குழந்தையை சீரழித்தால் அவனுக்கு ஏன் மரண தண்டனை இல்லை ? சிறுமி முதல் பெண்கள் வரை அனைவருக்கும் ஒரே சட்டத்தை இயற்ற வேண்டியது தானே?
தண்டனை என்பது குற்றவாளிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்த வேண்டும் அவனுக்கு ரூட்டு போட்டு கொடுக்கும் விதத்தில் அமையக் கூடாது என சமூக வலைதளத்தில் விமர்சனங்களை பலர் பதிவு செய்தனர்.
மேலும், குறிப்பாக வெளிநாடுகளில் கொடுப்பது போன்று பொதுமக்கள் முன்னிலையில் மரண தண்டனை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது.
இது தொடர்பாக காணொளி ஒன்று சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது. பெண்களை நாசமாக்குபவனுக்கு கொடுக்கும் தண்டனை இப்படி இருக்க வேண்டும் என இந்த காணொளியை பலர் சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றர்.
இந்த சம்பவம் உகாண்டா நாட்டில் சென்ற ஆண்டில் நடந்ததாக கூறப்படுகின்றது. பாலியல் குற்றச்சாட்டு நிரூபிக்க பட்ட நபரை, பொதுமக்கள் முன்னிலையில் மர்ம உறுப்பில் கல்லை கட்டி தொங்க விட்டு நூதன தண்டனை ஒன்றை கொடுத்துள்ளனர்.
இப்படி செய்ததால் தானே, குற்வாளிகளுக்கு பயம் வரும். இனி இவனுக்கு அந்த எண்ணம் கனவில் கூட வராது என, பலர் இந்தக் காணொளியை பகிர்ந்து வருகின்றனர்.