காட்டுக்குள் அழுகிய நிலையில் கிடந்த வெளிநாட்டு பெண்ணுக்கு நடந்தது என்ன? வெளியான பின்னணி தகவல்கள்

கேரளாவுக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண்ணின் கொலை வழக்கில் 2 சுற்றுலா வழிகாட்டிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லாட்வியா நாட்டை சேர்ந்த இளம்பெண் மன அழுத்த நோய்க்கு சிகிச்சை பெற்றுக்கொள்ள கடந்த பிப்ரவரி மாதம், திருவனந்தபுரத்தில் உள்ள போத்தன்கோட்டில் ஆயுர்வேத சிகிச்சை மையத்துக்கு சென்றுள்ளார்.

சிகிச்சை பெற்று முடித்த பின்னர், கேரளாவில் இருந்த அவர், மார்ச் 14 ஆம் திகதி கோவளம் கடற்கரைக்கு சென்றவர் திரும்பி வரவில்லை.

இதுகுறித்து அவரின் சகோதரி இலீஸ், பொலிசில் புகார் கொடுத்தார். மேலும், இளம்பெண்ணின் கணவர் ஆண்ட்ரூஸ், கேரள டி.ஜி.பி-யைச் சந்தித்து புகார் அளித்தார்.

இளம்பெண்ணின் கணவரும் சகோதரியும் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து மரணத்தில் மர்மம் இருப்பதாகத் தெரிவித்தனர்

இதுகுறித்து கடந்த ஒரு மாதகாலமாக பொலிசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கோவளம் வாழமுட்டம் பகுதியில் மாங்குரோவ் காட்டுக்குள் வெளிநாட்டு இளம்பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

அழுகிய நிலையில் கிடந்த அந்த உடல், , லாட்வியா நாட்டை சேர்ந்த பெண்ணின் உடல் தான் என உறுதிப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் கோவளத்தில் சுற்றுலா வழிகாட்டிகளாக வலம் வந்த உமேஷ், உதயன் ஆகிய 2 பேரை பொலிசார் இன்று கைது செய்தனர்.

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள புகைப்படம் மற்றும் வீடியோக்களை ஊடகங்கள் வெளியிட வேண்டாம் என கேரள டி.ஜி.பி லோக்நாத் பெகரா கூறியள்ளார்.

தங்களை சுற்றுலா வழிகாட்டிகள் எனக்கூறி இவர்கள் இருவரும் அப்பெண்ணை பலாத்காரம் செய்து காட்டுக்குள் வீசியுள்ளனர். இறந்த இளம்பெண்ணின் உடலில் கிடந்த ஓவர்கோட் உதயனுடையது. உடல் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் சிதறிக்கிடந்த முடிகளும் இவர்கள் இருவருடையதுதான்.

ரசாயனம் மற்றும் தடயவியல் அறிக்கை வந்த பிறகுதான், கொலை என உறுதி செய்த பிறகே இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.