தன்னை கைது செய்யும் முயற்சியை உடனடியாக நிறுத்துமாறு சர்வதேச பொலிஸாரிடம் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் மேன்முறையீடு செய்துள்ளார்.
தன்னை கைது செய்யும் நடவடிக்கையானது முற்று முழுதும் அரசியல் காரணங்களை அடிப்படையாக கொண்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணை முறி மோசடி சம்பந்தமாக இலங்கைப் பிரஜை இல்லாத மலேசியப் பிரஜையான இவரை கைது செய்ய சர்வதே பொலிஸாரின் உதவியை இலங்கை நாடியிருந்தது.
அதன்படி இவரை கைது செய்ய சர்வதேச பொலிஸார் சிகப்பு அறிக்கை பிடியாணையை அண்மையில் பிறப்பித்தனர்.
இந்த நிலையில் திடீரென இலங்கையிலிருந்து சென்ற அர்ஜூன் மகேந்திரனை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






