டெங்குத் தொற்று காரணமாக உயர்தர வகுப்பு மாணவி உயிரிழப்பு!

மட்டக்களப்பு – ஆரையம்பதியைச் சேர்ந்த உயர்தரம் கற்கும் மாணவியொருவர் இன்று (திங்கட்கிழமை) காலை டெங்கு நோயின் தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

செல்வி ச.ஜதுஸ்ரிக்கா (17 வயது) என்பவரே மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும், குறித்த மாணவியின் மரணம் தொடர்பிலான அறிக்கை கிடைத்த பின்னரே உறுதியாகக் கூறமுடியும் என மண்முனைப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலையில் கற்றுவரும் குறித்த மாணவி அண்மையில் வெளியான கா.பொ.த.சாதாரண தர பரீட்சையில் 8 A தரச் சித்திகளையும் 1 B தரச் சித்தியையும் பெற்று உயர்கல்வி பெறுவதற்கான தகுதியை பெற்றிருந்தார்.

உயிரிழந்தவர் ஒரு பொதுச்சுகாதார பரிசோதகரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.