காதலி கொடுத்த பரிசு பொருளாலே காதலியை கொலை செய்த காதலன்!

வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சபீருக்கும் காட்பாடி அடுத்த கல்புதூர் பகுதியை சேர்ந்த சுபித்ரா தேவியும் 4 வருடங்களாக காதலித்து வந்தனர்.அவ்வபோது சுபித்ராவிடம் சபீர் திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டு வந்து நிலையில்,அப்பெண் பெற்றோர் சம்மதமில்லாமல் திருமணத்திற்கு ஒப்புகொள்ளமாட்டேன் என கூறிவிட்டார்.

இந்நிலையில் தான் நீண்ட நாட்களுக்கு பிறகு சபீர் நேற்று சுபித்ராவுக்கு போன் செய்து உன்னுடன் பேச வேண்டும் என கூறியுள்ளார்.சுபித்ராவும் சபரிரை பார்த்து பேச வந்துள்ளார்.

மறுபடியும் சுபித்ராவை தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறும் இஸ்லாமிய மதத்திற்கு மாறுமாறு கேட்டுள்ளார் சபீர்.இதற்கு சுபித்ரா மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த சபீர் தான் வைத்திருந்த பேனா கத்தியை கொண்டு திடீரென சுபித்ராவின் கழுத்தை அறுத்துள்ளார்.

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த சுபித்ராவை மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.பின் அவரை பொலிஸ் கைது செய்துள்ளனர்.

சபீர் சுபித்ரா கழுத்தை அறுக்க பயன்படுத்திய கத்தி 4-வருடங்களுக்கு முன் சுபித்ரா தன் காதலன் சபீருக்கு பரிசாக அளித்த கத்தி என்பது குறிப்பிடதக்கது.