புதிய அரசியல் கட்சியை தொடங்கிய நித்யானந்தா: ரஞ்சிதாவுக்கு என்ன பதவி தெரியுமா?

சர்ச்சை சாமியார் நித்தியானந்தா திடீர் என “நித்தியானந்தா அரசியல் சேனை” எனும் ஆன்மீக அரசியல் அமைப்பை துவங்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

பிரம்மச்சாரி என சொல்லிக்கொண்டு தனக்கென ஒரு ஆன்மிக பக்தர்கள் கூட்டத்தை வைத்துக்கொண்டு சாமியாராக வலம் வந்து கொண்டிருப்பவர் நித்தியாநந்தா.

நடிகை ரஞ்சிதாவுடன் தனிமையில் இருக்கும் வீடியோ வெளியாகி கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பெரும் பரப்பை ஏற்படுத்தியது.

“புரட்சி செய்வோம், புதிய சரித்திரம் படைப்போம், இளைஞர்களே இணைவீர்” என உறுப்பினர் சேர்க்கைக்காக போஸ்டர் அடித்து திருவண்ணாமலை நகரம் முழுவதும் ஒட்டியுள்ளனர்.

நித்தியாநந்தாவின் இந்த செயலால் தமிழகத்தில் இருந்த அவரது ஆசிரமங்கள் அடித்து நொருக்கப்பட்டன. அந்த வீடியோ பொய் என தொடர்ந்து நித்தி கூறிவந்தார்.

அந்த சம்பவம் புகார்,வழக்கு, நீதிமன்றம் என நித்திக்கு பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தியது.

இதனால் அவமானப்பட்ட நித்தியானந்தா திருவண்ணாமலையில் தனக்கென நிரந்தரமாக ஆதரவாளர்கள் வட்டாரத்தை உருவாக்க உருவாக்கி வைத்துள்ளார்.

தனக்கு வரும் எதிர்ப்புகளை சமாளிக்க அரசியல் அமைப்பை உருவாக்க விரும்பியுள்ளார். இதற்காக திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சில இளைஞ்சர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்து அவர்கள் மூலமாக நித்தியானந்தாவுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டும் பணி தொடங்கியுள்ளது.

தற்போது அந்த இளைஞர்களை வைத்து புரட்சி செய்வோம், புதிய சரித்திரம் படைப்போம், இளைஞர்களே இணைவீர்” என உறுப்பினர் சேர்க்கைக்காக போஸ்டர் அடித்து திருவண்ணாமலை நகரம் முழுவதும் ஒட்டியுள்ளனர்.

அந்த அரசியல் நித்தியானந்தா அரசியல் சேனை என பெயர் வைத்துள்ளனர்.

இந்த புதிய அமைப்பில் ரஞ்சிதாவுக்கும் பதவி வழங்க உள்ளனராம் அனேகமாக பொதுச்செயலாலர் அல்லது மகளிர் அணி செயலாலராக இந்த கட்சியில் ரஞ்சிதா ஆவார் என கூறுகின்றனர்.

இந்த அரசியல் கட்சிக்கு முழுக்க முழுக்க நிதியுதவி நித்தியாநந்தா அறக்கட்டளை தான் பார்த்துகொள்கிறதாம், தனக்கு வரும்ம் எதிர்ப்புகளை இந்த அமைப்பின் மூலம் பதிலடியாக நித்தியாநந்தா கொடுப்பார் என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.