சமையல் எரிவாயு விலை அதிகரிப்பின் எதிரொலி! உணவுப் பொதிகளின் விலை அதிகரிப்பு!!

சமையல் எரிவாயு விலை 245 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதை அடுத்து நாளை முதல் சோறு உணவு பொதி ஒன்றின் விலையை 10 ரூபாவால் அதிகரிக்க உள்ளதாக உணவகங்களின் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இதனை தவிர உணவகங்களின் ஏனைய உணவுகளின் விலைகளும் அதிகரிக்கப்படலாம் என உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் கூறியுள்ளார்.உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவுகளுக்கு விலைகளை நிர்ணயம் செய்ய அதிகாரம் பெற்ற நிறுவனங்கள் எதுவும் இல்லை எனவும், இதனால், வெவ்வேறு உணவகங்களில் உணவுகளின் விலைகளில் வித்தியாசங்கள் இருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலை 245 ரூபா அதிகரிக்கப்பட்டது. இதனடிப்படையில், ஆயிரத்து 431 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றில் விலை ஆயிரத்து 676 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.