பொலிஸாரிடம் மன்றாடிய கனடா கொலையாளி- (வீடியோ)

கனடாவின் டொரன்டோவில் இன்று பொதுமக்கள் மீது வானை மோதி பலரை கொலை செய்த நபர் பொலிஸார் அவரை கைதுசெய்ய முயன்றவேளை என்னை சுட்டுக்கொன்றுவிடுங்கள் என மன்றாடியதை காண்பிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

அலெக்ஸ் மினாசியன் என்ற அந்த நபர் பொலிஸாரிடம் துப்பாக்கிபோன்ற ஒரு பொருளை காண்பித்து என்னை கொன்று விடுங்கள் என மன்றாடுவதையும் எனினும் அதனை பொருட்படுத்தாமல் பொலிஸார் அவரை நிலத்தில் வீழ்த்தி இழுத்துச்செல்வதையும் குறிப்பிட்ட வீடியோவில் காணமுடிகின்றது.

canada-5-500x291 என்னை சுட்டுக்கொல்லுங்கள் – பொலிஸாரிடம் மன்றாடிய கனடா கொலையாளி- (வீடியோ) என்னை சுட்டுக்கொல்லுங்கள் – பொலிஸாரிடம் மன்றாடிய கனடா கொலையாளி- (வீடியோ) canada 5

அலெக்ஸ் தனது கையில் உள்ள பொருள் ஒன்றை காண்பிப்பதையும் அதிகாரியொருவர் அலெக்ஸை; நிலத்தில் இருக்குமாறும் இல்லை கொன்றுவிடுவேன் என எச்சரிக்கை விடுப்பதையும் வீடியோ காண்பித்துள்ளது.

அவ்வேளை அலெக்ஸ் என்னை கொல்லுங்கள் கதறுகின்றார்.

canada6-500x386 என்னை சுட்டுக்கொல்லுங்கள் – பொலிஸாரிடம் மன்றாடிய கனடா கொலையாளி- (வீடியோ) என்னை சுட்டுக்கொல்லுங்கள் – பொலிஸாரிடம் மன்றாடிய கனடா கொலையாளி- (வீடியோ) canada6
நடப்பதை அறியாமல் அருகிலுள்ள கட்டிடத்திலிருந்து பொதுமக்கள் வெளியே வருவதையும் பின்னர் அவர்;கள் அங்கிருந்து வெளியேறுவதையும் வீடியோ காண்பித்துள்ளது.

அதற்கு சில நிமிடங்களின் பின்னர் சந்தேகநபர் நிலத்தில் விழுந்து கிடப்பதையம் பொலிஸார் அவரின் கையை பிடித்து விலங்கிடுவதையும் வீடியோ காண்பித்துள்ளது.

எனினும் குறிப்பிட்ட நபரின் கையில்துப்பாக்கியிருக்கவில்லை என பொலிஸார்தெரிவித்துள்ளனர்.