கிராம உத்தியோகத்தருக்கான போட்டிப் பரீட்சையில் அகில இலங்கை ரீதியாக தமிழ் இளைஞன் முதலிடம் பெற்றுள்ளார்.
மன்னார், வங்காலை பிரதேசத்தை சேர்ந்த பூண்டிராஜ் லீனா என்பவரே இவ்வாறு முதலிடம் பிடித்துள்ளார்.
கிராம உத்தியோகத்தருக்கான பரீட்சை பெறுபேறுகள் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய 163 புள்ளிகளை பெற்று மன்னார் மாவட்டத்தை சேர்ந்த தமிழ் இளைஞன், அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்துள்ளார்.
அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற பூண்டிராஜ் லீனாவுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.