ஒரு கிலோமீற்றர் தூரம் வரையில் உள்வாங்கிய கடல்! அச்சத்தில் மக்கள்

கடல் சீற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், ராமநாதபுரம் அடுத்த திருப்பாலைக்குடி கடற்பகுதியில் நேற்றைய தினம் கடல் உள்வாங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமாரியின் கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக இந்தியக் கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதன்காரணமாக 2ஆவது நாளாகவும் நேற்றைய தினம் தனுஷ்கோடி பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறான நிலையில் நேற்று ராமநாதபுரம் அடுத்த திருப்பாலைக்குடி கடற்பகுதியில் ஒரு கிலோமீற்றர் தூரம் வரை கடல் உள்வாங்கிய நிலையில் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில் மேலும், கடல் உள்வாங்கிய விடயம் தொடர்பாக தொடர்பாக அரசு எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை என குறித்த மக்கள் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.