போலாந்தில் சக தோழியையே பெண் ஒருவர் பேருந்தில் தள்ளி விட்டு கொலை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலாந்தின் Czechowice பகுதியின் Dziedzice-ல் உள்ள சாலையில் இரண்டு பெண்கள் பேசிக் கொண்டு நடந்து செல்கின்றனர். அப்போது அந்த பெண்களில் ஒருவர் திடீரென்று குறித்த சாலையில் பேருந்து வந்த போது, தள்ளி விடுகிறார்.
இதில் அந்த பெண்ணின் தலை நூலிழையில் டயரில் சிக்காமல் தப்பியது, இருப்பினும் உடலில் காயங்கள் ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியதால், சக தோழியையே பெண் ஒருவர் பேருந்தில் தள்ளி கொலை செய்ய முயற்சிகிறார் என்று கூறி வீடியோ வெளியாகியுள்ளது.
அதன் பின் அந்த பெண் கூறுகையில், நான் விளையாட்டிற்கு தள்ளியதாகவும், ஆனால் பேருந்து வரும் என்பதை நான் நினைத்து பார்க்கவே இல்லை என்று கூறியுள்ளார்.
இருப்பினும் இது தொடர்பாக அந்த பெண் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்தாகவும், இனிமேல் இது போன்ற விபரீத விளையாட்டு விளையாடக் கூடாது என்று எச்சரித்து அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.