இலங்கையில் தடுக்கப்படவேண்டியது: எச்சரிக்கும் பிரித்தானியா

நல்லிணக்க முயற்சிகளில் இலங்கை சுட்டிக்காட்டும் அளவிற்கு எவ்வித முன்னேற்றங்களையும் அடையவில்லை என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜோயான் ராயன் குற்றம் சுமத்தியுள்ளார்.

பிரித்தானியாவின் தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்ற குழுவில் பிரதி தலைவராக உள்ள எல்பீல்ட் வடக்கு நாடாளுமன்ற உறுப்பினரான ஜோயான் ராயன், தனது புதுவருட வாழ்த்துச் செய்தியில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தண்டிக்கப்படாத கலாசாரம் நிலவுகின்றமை தடுக்கப்படவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அவ்வாறான ஒரு சூழல் இல்லையெனின், இலங்கையில் நிரந்தரமான சமாதானத்துக்கான அடிக்கல்லை நாட்டமுடியாத நிலை எதிர்காலத்தில் ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.