சவூதி அரச குடும்பத்திற்கு இப்படியொரு அசிங்கமா..?

இளவரசர் முகமத் பின் சல்மான் தலைமையில் சவூதி அரேபியா பல புதிய மாற்றங்களைச் சந்தித்து வருகிறது, இவரது தலைமையிலான அரசு அவசியம் இல்லாத கட்டுப்பாடுகளைத் தகர்த்து அடுத்தத் தலைமுறைக்கான நாட்டை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதுமட்டும் அல்லாமல் சல்மான் முடிவுகளுக்கும் மக்கள் மத்தியில் அதிகளவிலான வரவேற்பு கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சிறப்பான சூழ்நிலையில் பிரபலமான இளவரசர் ஒருவரால் சவூதி அரசு குடும்பத்திற்குக் களங்கம் ஏற்பட்டுள்ளது.

சவுது அல் – ஃபைசல்

சவூதி அரேபியாவின் நீண்ட கால வெளியுறவு அமைச்சராக இருந்த சவுது அல் – ஃபைசல், பாரிஸில் தனது ஆசை நாயகிக்காகத் தனிப்பட்ட முறையில் (பர்சனல்) நீல படங்களைத் தயாரிக்க ஒரு நிறுவனத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளார். ஆனால் அதற்கான பணத்தை அளிக்காத காரணத்தால் வழக்கு தொடுத்துள்ளது.

நீல படம்

இந்த நீல படம் எப்படி இருக்க வேண்டும், தனது எதிர்பார்ப்புகள் என்ன என்பதைப் படத்தைத் தயாரிக்கும் Atyla concierge என்னும் நிறுவனத்திற்குச் சவுது அல் – ஃபைசல் தொடர்ந்து அறிவுரை வழங்கியுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இடம்

இந்தப் படம் பாரிஸில் இருக்கும் சவுது அல் – ஃபைசல்-இன் ஆடம்பர அப்பார்ட்மெண்டில் தயாரிக்கப்பட்டது. இவரது அப்பார்ட்மென்ட் Arc de Triomphe என்னும் பிரபலமான நுழைவின் அருகில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பணம்

இந்தப் படத்தைத் தயாரித்தற்கான பணம் சவுது அளிக்கவில்லை என Atyla concierge நிறுவனம் வழக்கு தொடுத்துள்ளது. மேலும் சவுது அல் – ஃபைசல் 2015ஆம் ஆண்டுத் தனது 75 வயது இறந்துவிட்டார். இந்த வழக்குத் தற்போது பாரிஸ் அருகில் நான்ட்ரீ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது என டெய்லிமெயில் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

நஷ்டஈடு

இந்த வழக்கில் Atyla concierge நிறுவனத்திற்கு நிலுவை தொகையான 78,000 பவுண்ட் தொகையைச் சவுது சொத்துக்களை மேலாண்மை செய்யும் நிறுவனம் அளிக்க வேண்டும் என இந்த நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

சிறு தொகை

இந்தத் தொகை சவூதி அரசு குடும்பத்தின் சொத்துக்களை ஒப்பிடுகையில் மிகவும் சிறிய தொகை என்றாலும், இந்த வழக்கின் மூலம் சவூதி அரசு குடும்பத்திற்குக் களங்கம் ஏற்பட்டுள்ளது.

ஆசை நாயகி

சவுது அல் – ஃபைசல்-இன் ஆசை நாயகி ஒரு மோரோக்கோ அழகி என்றும் அவர் தற்போது பாரிஸை விட்டு வெளியேறிவிட்டதாகவும் தகவல் கிடைத்துள்ளது என டெய்லி மெயில் தெரிவித்துள்ளது.

வெளியுறவு அமைச்சர்

சவூதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சர் சவுது அல் – ஃபைசல் 1975 முதல் 2015 வரை, அதாவது அவர் இறக்கும் வரையில் இப்பதவியில் பணியாற்றியுள்ளார். மேலும் இவர் பிரிஸ்டன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார். இவர சுமார் 7 மொழிகளைச் சரளமாகப் பேசக்கூடியவர்.

மனைவி

சவுது அல் – ஃபைசல், தனது உறுவுக்கார பெண்ணான ஜாவ்ஹாரா பின்ட் அப்துல்லா பின் அப்துல் ரகுமான என்பவரை திருமணம் செய்து 3 மகன், 3 பெண் பிள்ளைகளைப் பெற்றுள்ளார்.