கரகோஷத்தின் மத்தியில் மைதானத்தில் மலர்ந்த காதல் திருமணத்தில் முடிந்த அதிசயம்!!

பொதுநலவாய விளையாட்டு விழாவின் மூலம் ஒரு காதல் ஜோடி ஒன்றுசேர்ந்துள்ளது. கூடைப்பந்தாட்ட மைதானத்தின் நடுவில்தான் இந்த காதல் போட்டி நடந்தது. மகளிருக்கான கூடைப்பந்தாட்டப் போட்டியில் இங்கிலாந்து அணி மொஸம்பிக் அணியை வீழ்த்தியது.இந்த வெற்றியை அங்கு கொண்டாடாது இங்கிலாந்து வீராங்கனை ஜோர்ஜியா ஜோன்ஸ், ஆண்களுக்கான கூடைப்பந்தாட்டப் போட்டியை காண சென்றுள்ளார்.இந்த வேளை இங்கிலாந்து ஆண்கள் கூடைப்பந்தாட்டப் போட்டி முடிந்தவுடன் இங்கிலாந்து வீரர் ஜமீல் அண்டர்சன், ஒற்றைக் காலை வளைத்து தரையில் மண்டியிட்டு ஜோர்ஜியாவை நோக்கி என்னைத் திருமணம் செய்துகொள் என்று கையிலிருந்த திருமண மோதிரத்தை நீட்டினார்.

அதை ஏற்றுக்கொண்ட ஜோர்ஜியா கட்டியணைத்து தனது சம்பதத்தை தெரிவித்தார். அரங்கத்தில் கூடியிருந்த பார்வையாளர்கள் கரகோஷம் எழுப்ப இருவரும் கட்டியணைத்துக்கொண்டனர்.