நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவு விளக்கத்துடன்!

நீரிழிவு நோயாளிகள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உணவுக் கட்டுப்பாடு மிகவும் அவசியமாகிறது.

முதலில் எந்த வகையான உணவுகளை சாப்பிட வேண்டும், எந்த மாதிரியான உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

குறிப்பாக உணவில் ஊட்டச்சத்துக்கள், கொழுப்பு சத்துக்கள், அதிக கலோரிகள் இல்லாத உணவுகளை தேர்வு செய்வது அவசியம்.

அவர்களுக்கான சிம்பிள் ரெசிபி இதோ,

மிளகு சீரக தோசை- தேவையான பொருட்கள்
  • கோதுமை – அரை கப்,
  • புழுங்கரிசி – அரை கப்,
  • பச்சரிசி – அரை கப்,
  • துவரம் பருப்பு – அரை கப்,
  • கடலைபருப்பு – அரை கப்,
  • வெந்தயம் – 2 தேக்கரண்டி,
  • மிளகு – 2 தேக்கரண்டி,
  • உப்பு – ருசிக்கேற்ப,
  • சீரகம் – 2 தேக்கரண்டி,
  • கறிவேப்பிலை – 2 கொத்து,
  • தூள் பெருங்காயம் – அரை தேக்கரண்டி,
  • எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை

மிளகு, சீரகத்தை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.

அரிசி, பருப்பு, வெந்தயம், கோதுமையை நன்றாக கழுவி 3 மணி நேரம் ஊற வைத்த பின் நன்றாக அரைத்து கொள்ளவும்.

அரைத்த மாவை உப்பு சேர்த்து கலந்து 8 மணி நேரம் புளிக்கவிடவும்

தோசை வார்க்கும் முன்பு, தட்டி வைத்த சீரகம், மிளகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுத்தால் தோசை ரெடி