நியூயார்க், டிரம்ப் டவரின் 50-வது மாடியில் தீவிபத்து- (வீடியோ)

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள டிரம்ப் டவரின் 50-வது மாடியில் நேற்று மாலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது.

அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்புக்கு நியூயார்க் நகரில் உள்ள மன்ஹாட்டன் பகுதியில் 58 மாடிகள் கொண்ட பிரமாண்ட கட்டிடம் உள்ளது.

இதில் மேற்பரப்பில் உள்ள 3 அடுக்குகளை தனது வீடாக மாற்றி வசித்து வருகிறார். அதிபர் பொறுப்பேற்ற டிரம்ப் பெரும்பாலும் வாஷிங்டன் நகரில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று மாலை சுமார் உள்ளூர் நேரப்படி 5.30 மணியளவில் டிரம்ப் டவரின் 50-வது மாடியில் திடீரென தீ பற்றியது. அங்கு பிடித்த தீ மளமளவென பரவியது.

தகவலறிந்து அங்கு ஐந்துக்கு மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தன. சுமார் 140க்கு மேற்பட்ட வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் சிக்கிய ஒருவர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி வருவதாக முதல் கட்டமாக தகவல்கள் வெளியானது.

டிரம்ப் டவரில் ஏற்பட்ட தீயை போராடி விரைவில் அணைத்த தீயணைப்பு படை வீரர்களுக்கு டிரம்ப் டுவிட்டரில் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் அதிபர் டொனால்ட் டிரம்ப், அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் வாஷிங்டன்னில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

4AEE40A200000578-5590101-The_massive_blaze_shot_out_several_windows_on_the_50_floor_with_-a-147_1523166079810  நியூயார்க்கில் உள்ள டிரம்ப் டவரின் 50-வது மாடியில் தீவிபத்து- (வீடியோ) 4AEE40A200000578 5590101 The massive blaze shot out several windows on the 50 floor with  a 147 15231660798104AEE276D00000578-5590101-A_fire_broke_out_at_Trump_Tower_in_Midtown_Manhattan_on_the_50th-a-152_1523166079919  நியூயார்க்கில் உள்ள டிரம்ப் டவரின் 50-வது மாடியில் தீவிபத்து- (வீடியோ) 4AEE276D00000578 5590101 A fire broke out at Trump Tower in Midtown Manhattan on the 50th a 152 15231660799194AEE9C8400000578-5590101-The_massive_response_by_the_FDNY_and_first_responders_saw_the_st-a-156_1523166080084  நியூயார்க்கில் உள்ள டிரம்ப் டவரின் 50-வது மாடியில் தீவிபத்து- (வீடியோ) 4AEE9C8400000578 5590101 The massive response by the FDNY and first responders saw the st a 156 1523166080084