குத்தாட்டம் போட்ட பொலிஸ்! – வீடியோ

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள திக்கம்கர் மாவட்டத்தை சேர்ந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் மது அருந்திவிட்டு நிற்கக்கூட முடியாமல் தள்ளாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

லீலாதர் திவாரி எனும் அந்த பொலிஸ் அதிகாரி உதவி துணை ஆய்வாளராக பணி புரிகிறார். இந்நிலையில் இன்று அளவிற்கு அதிகமாக மது அருந்திவிட்டு நிற்கக்கூட முடியாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தள்ளாடியபடி கீழே விழுந்தபடி இருக்கிறார்.

பின்னர் அவரின் சக பொலிஸார் ஒருவர் அவரை இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். இந்த காட்சிகள் சமூக வளைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த அதிகாரி இடை நீக்கம் செய்யப்பட்டதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.