வேலை தேடும் இலங்கை இளைஞர்களுக்கு…. வேலை வாய்ப்பு!!

ஜப்பான் நாட்டில் தொழில் வாய்ப்பிற்கான தொழில்நுட்ப பயிற்சியாளர்களை ஈடுபடுத்துவதற்கான வேலைத்திட்டம் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.இதுதொடர்பில் அரசாங்க உத்தியோகபூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மற்றும் ஐ.எம்.ஜப்பான் நிறுவனமும் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டதற்கமைவாக இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் மொழித் தேர்ச்சியில் ஜே.எல்.பி.ரி.4 அல்லது என்.ஏ.ரி.4 என்ற தரத்துடனான கல்விச் சான்றிதழைக் கொண்ட இலங்கை இளைஞர்களுக்கு பணியாளர் சேவைக்கான தொழில்வாய்ப்புக்கள் உண்டு.

18 வயதிற்கும் 30 வயதிற்கும் உட்பட்ட உயர்தரம் வரையில் கல்வி கற்றவர்கள் இதற்காக தமது தகவல்களை இலங்கை வெளிநாட்டு பணியகத்திற்கு சமர்ப்பிக்க முடியும்.

விண்ணப்பங்களை பதிவுத்தபாலில் அனுப்பிவைக்க வேண்டும்

விநியோகம் மற்றும் ஆட்சேர்ப்பு (பொதுவான பிரிவு)

இலங்கை வேலைவாய்ப்பு பணியகம்

இலக்கம் 234 டென்ஸில் கொப்பேகடுவ மாவத்த

கொஸ்வத்த பத்தரமுள்ள.

தொலைநகல் : 011 279 1814

இணையதள முகவரி: my_mKt@slbfe/ao2_mkt@slbfe.lk

இணையதளம்: www.slbfe.lk

இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு; 011 279 18 14 அல்லது 011 438 82 95 என்ற தொலைபேசி இலக்கங்களை இதற்காகப் பயன்படுத்த முடியும்.