கை,கால் கருப்பாக உள்ளதா? ஒன்றை ட்ரை பண்ணுங்க

வெயிற்காலங்களில் கால்கள் வரண்டும் கருமையடைந்தும் காணப்படும். இதற்காக ஆயிரக்காணக்கான பெண்கள் அழகு நிலையங்களை நாடிச் செல்வதுண்டும்.

இதற்கு நாம் பணம் செலவில்லாமல் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு கை கால்களை வெண்மையாக்க முடியும்.

வழிமுறை 1
  • கடலை மாவு
  • தயிர்

முதலில் ஒரு பௌலில் 3 டேபிள் ஸ்பூனில் கடலை மாவை போட்டு தயிர் ஊற்றி பேஸ்ட் செய்து கை மற்றும் கால்களி்ல் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்து வந்தால் நல்ல பயன் கிடைக்கும்.

வழிமுறை 2
  • வெள்ளரிக்காய்
  • மஞ்சள் தூள்

வெள்ளரிக்காய் சாற்றில் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து சருமத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வர கை கால்கள் கருமை நாளடைவில் மறைந்து வெண்மையாகிவிடும்.

வழிமுறை 3
  • சந்தனம்
  • மஞ்சள் தூள்
  • ரோஸ் வாட்டர்

ஒரு பௌலில் 3 டேபிள் ஸ்பூன் மற்றுமு் சந்தனப் பொடியுடன் கால் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து ரோஸ் வாட்டர் ஊற்றி பேஸ்ட் செய்து கை மற்றும் கால்களில் தடவி 20 நிமிடம் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் 2 முறை செய்து வந்தால் நல்ல பலனை பெறலாம்.