வெளிநாட்டில் இலங்கை பெண்ணொருவரின் விபரீத முடிவு!

சார்ஜாவில் இலங்கை பணிப்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.

ஓடும் காரில் இருந்து குதித்து அவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளதாக சார்ஜா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பணிப்பெண் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தமைக்கான காரணம் இன்னமும் வெளியாகவில்லை.

தனக்கு அனுசரனை வழங்கிய பாகிஸ்தான் நாட்டு சாரதியுடன் ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்து, குறித்த பெண் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.

குறித்த பணிப்பெண் சிறு காயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் தற்கொலை முயற்சித்தமைக்கான காரணத்தை ஆராய அந்த நாட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.