உங்கள் கால் பாதம் துர்நாற்றம் அடிக்கிறதா?

கால்களில் போதுமான காற்றோட்டம் இல்லாமல் இருக்கும் போது, அவ்விடத்தில் பாக்டீரியாக்கள் பெருக்கமடைந்து, வியர்வையுடன் சேர்ந்து துர்நாற்றத்தை ஏற்படுத்துகின்றன.

எந்நேரமும் ஷீக்கள் மற்றும் செருப்பகளை காலில் அணிந்திருப்பவர்களுக்கு தான் அதிகமாக இந்த துர்நாற்ற பிரச்சனையால் அவதிப்படுகின்றனர்.

இதோ 3 இயற்கை வழிகள்
பேக்கிங் சோடா

வெதுவெதுப்பான நீரில் பேக்கிங் சோடாவை சேர்த்து கலந்து, அந்நீரில் 15-20 நிமிடம் பாதங்களை ஊற வையுங்கள். இப்படி ஒரு வாரம் தொடர்ந்து செய்து வர, பாத துர்நாற்றம் நீங்கும்.

வேண்டுமானால், ஷூக்களில் பேக்கிங் சோடாவைத் தூவி, பின் அணியுங்கள். இதனால் பாதங்களில் துர்நாற்றம் வீசுவதைத் தடுக்கலாம்.

லாவெண்டர் எண்ணெய்

ஒரு அகலமான வாளியில் வெதுவெதுப்பான நீரை நிரப்பு, சில துளிகள் லாவெண்டர் எண்ணெய்களை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பின் அந்நீரில் பாதங்களில் 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். * இப்படி தினமும் 2 முறை என சில நாட்கள் பின்பற்றுங்கள்.

இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள், பாதங்களில் வீசும் துர்நாற்றத்தைப் போக்கும்.

வினிகர்

வினிகர் பாதங்களில் அமிலத்தன்மையை அதிகரித்து, பாக்டீரியாக்களை அழித்து, துர்நாற்றத்தைத் தடுக்கும். எந்த வகையான வினிகரை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

ஒரு அகலமான வாளியில் 8 கப் வெதுவெதுப்பான நீரில் ஊற்றி, அதில் 1 1/2 கப் வினிகர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதில் பாதங்களை 10-15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

இறுதியில் பாதங்களை சோப்பு பயன்படுத்தி நீரால் கழுவுங்கள்.