வசந்த புயலானது ரொறொன்ரோ பெரும்பாகத்திற்கு பலத்த மழை மற்றும் வலுவான காற்றை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ரொறொன்ரோ பெரும்பாகம் மற்றும் ஒன்ராறியோவின் தென்பாகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இக்காலநிலை செவ்வாய்கிழமை மாலை ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கொலராடோ குறைந்த அழுத்த அமைப்பு ஒன்று வசந்த காலத்தின் ஆரம்ப புயலை தீவிரப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுவதால் ஒன்ராறியோவின் தென்பாகம் மற்றும் மத்திய ஒன்ராறியோ பகுதிகளிற்கு செவ்வாய்கிழமை இரவு விசேட வானிலை அறிக்கை ஒன்று கனடா சுற்று சூழல் பிரிவினரால் விடுக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்கிழமை இரவு 15-முதல் 30-சென்ரி மீற்றர்கள் வரையிலான மழை எதிர் பார்க்கப்படுகின்றது.
புதன்கிழமை காலை ரொறொன்ரோ பெரும்பாகத்தில் 80-முதல் 85கிலோ மீற்றர்கள் வேகத்தில் வலிய காற்று வீசக்கூடிய சாத்திய கூறுகள் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
வலுவான காற்றினால் மின்செயலிழப்பு பிரச்சனையும் ஏற்பட வாய்ப்புக்கள் அமையலாம். எதிர்பார்ப்பதை விட காற்றின் வேகம் வலுவடைய கூடிய சாத்திய கூறுகளும் நேரலாம்.







