பெண் தர மறுத்ததால் ஒரே குடும்பத்தில் ஐவர் கொலை!

சிறுமி ஒருவரை இரண்டாவது தாரமாக மணக்க அனுமதி மறுக்கப்பட்டதால், அந்தச் சிறுமியும், அவளது குடும்ப உறுப்பினர்களும் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் ஜார்கண்டில் ஜாம்ஷெட்புரியில் நடந்துள்ளது.

17 வயதுச் சிறுமியைத் திருமணம் செய்து கொல்ல விருப்பப்பட்டு அதே பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் பெண் கேட்டுள்ளார்.

அவருக்குப் பெண் கொடுக்க குடும்பத்தினர் மறுத்துள்ளார். இதனால் தற்போது அந்த குடும்பம் மொத்தமாக கொடுரமாக கொல்லப்பட்டுள்ளனர்.

ஆனால் அவருக்கு ஏற்கனேவே திருமணம் ஆகிவிட்டது என்று கூறப்படுகிறது. இதனால் சிறுமியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அவருக்கு பெண் தர மறுத்துள்ளனர்.

இதனால் கோபமடைந்த அந்த நபர், தன்னுடன் 10 பேரை அழைத்து வந்து அந்த குடும்ப நபர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதில் அந்தக் குடும்பத்தில் சிறுமி உட்பட 5 பேரும் கொல்லப்பட்டனர். அவர்கள் உடலை அங்கு இருக்கும் காட்டுப்பகுதியில் இரவோடு இரவாகப் புதைத்த குழு, அந்த ஊரில் யாருக்கும் தெரியாமல் இருந்துள்ளது.

இந்த நிலையில் அந்தக் காட்டுப்பகுதியில் வேலை செய்தவர்கள் 5 பேரின் உடலை கண்டுபிடித்து பொலிஸாருக்குத் தகவல் அளித்தனர். பொலிஸ் விசாரணை செய்து கொலையாளிகளைக் கண்டு பிடித்துள்ளனர்.

இந்தக் கொடூரக் செயலை செய்த 10 நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களது பெயர்கள், விவரங்களில் வெளியிடவில்லை.

இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது எனத் தெரிவிக்கப்படுகிறது.